அகதிநிலை
சுவிசினுள் புலம்பெயர்வுக்கான அரசஅமைச்சு Bundesamt für Migration BFM அகதிகள் விண்ணப்பச் செயல்முறைகளுக்குப் பொறுப்பானது. இது பாசல், சியாசோ, குறொட்ஸ்லிங்கன், வால்ஒர்பே பகுதிகளில் உள்நுழைவு மற்றும் செயல்நிலைகளை வைத்துள்ளது. இங்கே அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
சுவிசின் மாநிலங்கள் அகதிகள் விண்ணப்பச் செயல்முறைகள் காலத்தில் விண்ணப்பதாரிகளின் வதிவிட, பராமரிப்பு, பண உதவிகளுக்குப் பொறுப்பானது. சுவிசின் அகதிகள் உதவி நிலை Schweizerische Flüchtlingshilfe SFH ஏனைய பல அகதிகள் உதவி நிலைகளின் (Carits, HEKS, SAH, SRK, VSJF போன்றன) தலைமையாக அகதிகள் மற்றும் விண்ணப்பதாரிகளின் கருத்துக்கள் சார்பாகச் செயற்படுகின்றன.
சுவிசின் அகதிமனுச் செயல்முறை பலவிடயங்கள் சேர்ந்து மிகக் கடினமாது. மனு ஏற்றுக்கொள்ளப்படல் அல்லது திருப்பி அனுப்பப்படல் தீர்மானங்களுக்கு, சுவிசின் அகதிச்சட்டம், மனுச் செயல்முறை, எழுத்துமுறை, அலுவலகமுறை போன்றவற்றை அறிந்து சரியாகச் செயற்படல் மிக முக்கியமானது. அகதிநிலை தேடுவோர், தற்காலிக அனுமதி பெற்றோர், அகதிகள், மறுக்கப்பட்டவர்கள் போன்றோர் பல நிலமைகளைச் சமாளித்தல் வேண்டும். சிறு விடயம் பெரிய இழப்பைக் கொடுத்துவிடும்.
அதனால் பல தகவல்களையும் கவனியுங்கள். ஆலோசனையை நாடுங்கள்.
In this section: அகதிமனுச் செயல்முறை, அகதிச்சட்டம், வதிவிடநிலை, திரும்பிச் செல்லல், சட்ட ஆலோசனை