Living in Switzerland – Information and counselling online  

வேலை

அகதிகோருவோர்

அகதிகோருவோருக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு வேலைசெய்யத் தடையுண்டு. அதன் பின் அகதிகோருவோர் வேலையாளர் கிடைக்காத துறைகளான உணவு விடுதிகள், கட்டிடத் தொழில், பராமரிப்பு (விடுதிகள், வைத்தியசாலைகள்) தோட்ட, நில, காட்டுப்பராமரிப்பு போன்ற துறைகளில் வேலை செய்யலாம். சுவிசாரும் இங்கே ஏற்கனவே வாழும் வெளியாரும் விண்ணப்பிக்காவிட்டால் மட்டுமே தொழில் அனுமதி கிடைக்கும்.

இதே அடிப்படையிலேயே வேலை இழப்பும் ஏற்படும்.

வரி சமுகக்காப்புறுதி: வேலைசெய்யும் அகதி கோருவோர் சகலரையும் போல் வரி மற்றும் வயோதிபம் AHV, உடல்ஊனம் IV , வேலைஇழப்பு போன்ற சமுகக் காப்புறுதிகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். சமுக உதவிப்பணம் பெற்றால் அதையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.

அகதி கோருவோருக்கான விசேட கழிவு: வருமானத்தில் 10 வீதத்தை அகதிசெயல்முறை, திருப்பி அனுப்புதல் செலவு போன்றவற்றிற்கு அரசவங்கிக்கணக்கில் வெப்பு செய்யப்படும். தொழில் அனுமதி தரப்படும் போது ஒழுங்கு செய்யப்பட்டு முதலாளியினால் நேரே செலுத்தப்படும்.

தற்காலிக அனுமதி

தற்காலிக அனுமதி பெற்றோருக்கு எதுவித கட்டுப்பாடுமின்றி வேலையும் அனுமதியும் வழங்குவது வதியும் மாநிலத்தின் நிலையில் தங்கியுள்ளது.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு நன்மையும் சொந்த முதலீடுகளும் இருந்தால் சுய தொழிலுக்கான அனுமதி பெறலாம்.

அகதி அனுமதி

அகதி அனுமதி பெற்றோருக்கு எதுவித கட்டுப்பாடுமின்றி சகல வேலையும் அனுமதியும் தராதரத்திற்கேற்பப் பெறவாய்ப்புண்டு.

 


In this section: வேலை, வசித்தல், வதிவிடஅனுமதிநிலை, குடும்பத்தை வரவழைத்தல், திருமணம், கல்வி, ஆரோக்கியம்

Related links:

Back to top