Living in Switzerland – Information and counselling online  

திருமணம்

அகதி கோருவோரும் அகதி பெற்றோரும் சுவிசினுள் திருமணமும் விவாகரத்தும் செய்யலாம். திருமணமும் விவாகரத்தும் சுவிசின் சிவில் சட்டப்படி நடத்துப்படும். வெளிநாட்டவர் சட்ட அடிப்படையிலேயே திருமணத்திற்கான அனுமதியைப் பெறலாம். விவாகரத்தும் வெளிநாட்டவர் சட்ட அடிப்படையிலான விளைவுகளைக் கொடுக்கும். மேலதிக தகவல்களுக்கு தாம்பத்தியம் தொடர்பான பகக்கங்களை வாசியுங்கள்.

அகதி கோருவோர் சுவிசாருடன், ஐரோப்பியருடன், நிரந்தர வதிவிட அனுமதி சி உள்ளவருடனான திருமணங்கள் வெளிநாட்டவர் சட்ட அடிப்படையில் திருமணக் காரியாலயங்களால் மிகக் கவனமாகவும் ஆழமாகவும் பரிசோதிக்கின்றன. இதனால் திருமணத்திற்கான அனுமதியைப் பெற நீண்ட காலம் எடுக்கலாம்.

கவனிக்க

வதிவிட இலாபங்களுக்கான சான்றிதழ் திருமண சந்தேகங்கள் ஏற்பட்டால் திருமணத்திற்கான அனுமதி மறுக்கப்படும்.

தேவைப்படும் சகல சான்றிதழ்களும் பரிசோதிக்கப்பட்டு திருமணத்திற்கான அனுமதியைப் பெற்று திகதி குறித்தால் மட்டுமே நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதைத் தடுக்கலாம்.

திருமணத்திற்கு முதல் மாநிலம் மாற முடியாது.

சில திருமணக் காரியாலயங்கள் வெளிநாட்டவரின் கடவுச் சான்றிதழை புலம் பெயர்வு அமைச்சிடம் ஒப்படைப்பார்கள்.

In this section: வேலை, வசித்தல், வதிவிடஅனுமதிநிலை, குடும்பத்தை வரவழைத்தல், திருமணம், கல்வி, ஆரோக்கியம்

Related links:

Back to top