Living in Switzerland – Information and counselling online  

வதிவிடஅனுமதிநிலை


அகதிகோருவோர்

நீலநிற என் அனுமதியை அகதிகோருவோர் விண்ணப்பச் செயல்முறைக்காலத்தில் பெறுவர். செயல்முறை முடிவு மாற இதுவும் மாறும். இந்த அனுமதியுடையோர் மூன்னறு முதல்ஆறு மாதத்திற்கு வேல செய்ய முடியாது. குடும்பத்தையும் அழைக்கமுடியாது.

அகதிகள்

வதிவிட அனுமதி பி வேலைஒப்பந்தம் இருந்தால் சுவிசாருடன் திருமணம் செய்வதால் தரப்படும். ஒவ்வொரு வருடமும் மாநிலத்தில் புதுப்பிக்கப்படல் வேண்டும். வேலை இழந்தால் நீடிக்கப்படுதல் தடைப்படலாம். போதியளவு வருமானமிருந்தால் மட்டுமே குடும்பத்தை அழைக்கலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகளும் வதிவிட அனுமதி பி பெறுவார்கள். நீடிக்கப்படுவதற்கு வேலை, சமுகப்பணம், இணைவாக்க முயற்சி என்பவற்றில் வேறு நிலை கவனிக்கப்படும். குடும்பத்தை அழைக்கலாம். யெனிவா சட்ட அடிப்படையிலான அகதிக் கடவுச்சான்றிதழ் கிடைக்கும். சுயநாட்டிற்குச் சென்றால் அனுமதி இரத்துச் செய்யப்படும். நீண்ட காலத்திற்கு அனுமதி பி உடன் இருப்பவருக்கு அனுமதி சி கிடைக்கும். இது காலவரையற்ற வதிவிட வசதியையும் தரும். குடும்பத்தையும் அழைக்கலாம். வேலைச்சட்ட அடிப்படையில் சுவிசாருக்குச் சமமான அனுமதி. அகதிகள் வந்து ஐந்து வருடத்தால் இதைப் பெறலாம்.

தற்காலிக அகதிகள்

நீலநிற வதிவிட அனுமதி எப், அகதிமனு நிராகரிக்கப்பட்டு நாட்டுக்குத்திருப்பி அனுப்ப இயலாமை இருந்தால் கொடுக்கப்படும். வருடம் ஒரு முறை புதுப்பித்தல் வேண்டும். சில துறைகளில் மட்டும் வேலைசெய்யலாம். குடும்பத்தையும் அழைக்கமுடியாது. சில வருடங்களின் பின்பு அனுமதி பி பெற மாநிலத்தில் விண்ணப்பிக்கலாம்.

வதிவிட அனுமதி எப், அகதிமனு ஏற்கப்பட்டாலும் அகதிநிலைக் காரணங்களால் குறைந்த அனுமதியாக இது கொடுக்கப்படும். வந்து ஐந்து வருடத்தால் அனுமதி பி தரும்படி விண்ணப்பிக்கலாம். புலம்பெயர்வு அமைச்சு தீர்மானிக்கும். இந்த தற்காலிகமாக ஏற்கப்பட்டவர் சுயமாக உழைத்தால் போதிய வதிவிடம் இருந்தால் யெனிவா சட்ட அடிப்படையிலான அகதிக் கடவுச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

In this section: வேலை, வசித்தல், வதிவிடஅனுமதிநிலை, குடும்பத்தை வரவழைத்தல், திருமணம், கல்வி, ஆரோக்கியம்

Related links: