Living in Switzerland – Information and counselling online  

வசித்தல்

வசித்தலுக்கான நிலைகள் வதிவிட அனுமதியில் தங்கியுள்ளது.

விண்ணப்பத்தின் போது அகதி கோருவோருக்கு

  • விண்ணப்பச் செயலின் ஆரம்பத்தில் அல்லது முழுவதும் அகதிவிடுதிநிலைகளில் வசித்தல்.
  • ஆராய்விற்கு நீண்ட காலம் தேவைப்பட்டால் ஒரு மாநிலத்திற்கு அனுப்பப்படலாம்.
  • விமான நிலையத்தில் விண்ணப்பம் செய்தால் முதலில் அங்கேயே தங்கவேண்டும்.

விண்ணப்பச் செயலின் ஆராய்வுக் காலத்தில் அகதிவிடுதிநிலைகளில் பலருடனும் இணைந்த வதிவிடம் அமையும். நீண்ட காலம் வாழ்வோர், வேலைசெய்வோர், பெரிய குடும்பத்தினருக்கு தனித்த வதிவிடம் தரப்படும்.

விண்ணப்பம் ஆராய்விற்கு ஏற்கப்படாதவர் மாநிலத்திற்கு அனுப்பப்படமாட்டார்கள். முடிவு கிடைத்ததும் அகதிவிடுதிநிலையையும் சுவிசையும் விட்டு வெளியேற வேண்டும். நாடு திரும்ப முடியாவிட்டால் தற்காலிக அவசரகால வதிவிட ஒழுங்கு பெற வாய்ப்புண்டு.

நிராகரிக்கப்பட்ட அகதிவிண்ணப்பதாரிகள் அகதிவிடுதிநிலையை அல்லது தனித்த வதிவிடத்தையும் சுவிசையும் விட்டு வெளியேற வேண்டும். நாடு திரும்ப முடியாவிட்டால் தற்காலிக அவசரகால வதிவிட ஒழுங்கு பெற வாய்ப்புண்டு.

அகதியாக ஏற்கப்பட்டவர் தனித்த வதிவிடத்தை பெறலாம்.

வதிவிடம்

அகதி கோருவோர் தரப்பட்ட மாநிலத்திலேயே வசித்தல் வேண்டும்.

தற்காலிக அனுமதி பெற்றோர் மாநிலத்தினுள் மக்கள்சபைப் பகுதிகளை மாற்றலாம். மாநிலம் மாற முடியாது. குடும்பத்தினருடன் இணையவேண்டியிருந்தால் மட்டுமே மாறலாம். இது தொடர்பாக அமைச்சு தீர்மானிக்கும்.

அகதியாக ஏற்கப்பட்டவர் இந்த அனுமதியை குறித்த மாநிலத்தினுள் பெற்றதால் மாநிலத்தினுள் மக்கள்சபைப் பகுதிகளை மாற்றலாம். மாநிலம் மாற முடியாது.விரும்பினால் போக இருக்கும் மாநிலத்தின் புலம்பெயர்விற்குப் பொறுப்பு நிலையத்தில் விண்ணப்பம் செய்தல் வேண்டும். நிரந்தர அனுமதி சி கிடைத்த பின்பு மாநிலம் மாறலாம்.

In this section: வேலை, வசித்தல், வதிவிடஅனுமதிநிலை, குடும்பத்தை வரவழைத்தல், திருமணம், கல்வி, ஆரோக்கியம்

Back to top