Living in Switzerland – Information and counselling online  

திரும்பிச் செல்லல்

மாநில நிறுவனங்கள், மக்கள்சபைகள், அகதிஉதவிநிலைகள் அகதிகள் திரும்பி நாட்டுக்குச் செல்லல் உதவி விடயத்தில் ஏற்படுத்தப்படும் புதிய மாறéறங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பெறலாம். இவை தனிப்பட்ட முறையில் அகதி விண்ணப்பதாரிகளுக்கும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு கட்டாயம் நாடுதிரும்ப வேண்டியவர்களுக்கும், நாடு திரும்ப விரும்புபவர்களுக்கும் நாடு திரும்பிச் செல்லலுக்கான திடட்டங்களுக்கு பொறுப்பான நிலைகளாகச் செயற்படுகின்றன.

இவை கீழ்வரும் உதவிகளைப்புரிகின்றன:

  • நாடு திரும்புதல் பயணத்தை ஒழுங்கு செய்தல்
  • தேவைப்படும் அத்தாட்சி கடிதங்களை ஒழுங்கு செய்தல்
  • வாழ்க்கை ஆரம்பிக்க நிதிஉதவி வழிமுறை
  • இங்கிருந்த காலத்தில் வேலை செய்திருந்தால் செலுத்திய சமுககாப்புறுதிப்பணங்களை மீளப்பெறல்
  • நாடுதிரும்பிய பின்பும் வைத்தியச் செலவுத் தேவையை ஒழுங்கு செய்தல்
  • விசேட நாடு திரும்பிச் செல்லலும் அங்கே மீண்டும் வாழ்க்கை தொடங்குவதற்கான திட்டமும்.

Related links: