Living in Switzerland – Information and counselling online  

உடற்பயிர்ச்சி

உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவதற்கு காலம் ஒரு வரைமுறையில்லை. எப்பொளுதும் இதை தொடங்கலாம்.

தோடர்ந்து உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவது, அதிக எடை, இருதய நோய்கள், இரண்டாம்வித நீரிழிவு (சினிவருத்தம்), முதுகு வலி மற்றும் பெருங்குடல், எலும்பு சம்மந்தபட்ட நோய்கள் (ஒஸ்த்தயொபொரொசிஸ்) மார்பகப்புற்றுநோய்கள் போன்று அதிகம் ஏர்ப்படுவதற்கான ஆபத்துக்களை குறைக்கிண்றது.
உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவது, மனதில் தோன்றும் இன்னல்களை குறைத்து, மன நிறைவை அடைவதற்கும் காரனியாக அமைகிறது.
உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பவர்கள் நீண்டகாலம் வாழ்வார்கள். வயது வரும்போது இவர்களுக்கு அதிகமான பராமரிப்பு தேவைப்படாது. இதுவரை காலமும் உடற்பயிர்ச்சியில் ஈடுபடாமல் முதியோர் ஆகியவர்கள், இனி தொடர்ந்து உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவது அவற்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
பெரியவர்கள், ஒரு நாளுக்கு அரை மணி நேரம் உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவது, சுகாதாரம், பொதுநலம், வாழ்க்கைத்தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பொதுமாக அமைகிறது. ஏர்க்கனவே குறைந்த அளவில் உடற்பயிர்ச்சியில் ஈடுபட்டுவந்தவர்கள், அவர்கள் அவர்களது சகிப்பு தன்மை, தசை திறன் மற்றும் நெகிழ்வு போன்றவற்றிற்கு ஒரு சிறப்பு பயிர்ச்சி எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு கூடுதல் பயன் கிடைக்கும்.
இளம் பருவத்தினர் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவதும், குளந்தைகள் இன்னும் அதிகமாக ஈடுபடுவதும் வேண்டும். மேலும் குளந்தைகள் மற்றும்  இளம் பருவத்தினர் வலுவான எலும்புகளைக் கொள்வதற்கும், இதயத்தை மற்றும் இரத்த ஓட்டத்தைத் துண்டுவதற்கும், தசைகளை வலுப்படுத்தவும்;, நெகிழ்வுத்தன்மையை பராமரிக்கவும்; மற்றும் விரைவுத்திறனை மேம்படுத்தவும் ஒரு வாரத்தில் பலமுறை பயிர்ச்சியில் ஈடுபடுதல் வேண்டும்.
உடற்பயிர்ச்சியில் ஈடுபடுவதால் ஏர்ப்படும் தீங்குகளைவிட, உடற்பயிர்ச்சியில் ஈடுபடாமல் இருப்பதனால் ஏர்ப்படும் தீங்குகள் அதிகமானவை.

Related links: