Living in Switzerland – Information and counselling online  

உணவு முறை


சீரான உணவுகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு ஓர் முக்கிய காரணி ஆகும்.


சுவிஸில் நீங்கள் பல வகையான பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி வகைகள், மீன் வகைகள் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம். இங்கு, மத்திய தரைக்கடல், ஆசியா, ஆபிரிக்கா உணவுகள் மற்றும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சுவையூட்டும் பலசரக்கு பொருட்களும் உள்ளன.


உணவுக் கோபுரம்


உணவுக் கோபுரம் உணவுப்பட்டியல் அமைப்பதற்கு உதவுகிறது. தினமும் பல முறை காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.


உங்கள் தினசரி உணவுப் பட்டியலை உணவுக் கோபுரத்தின் அடிப்படையில் அமையுங்கள். இது உங்களுக்கு ஓர் சீரான உணவை உட்கொள்ளுவதற்கான உறுதியை அளித்து உங்களது நன்மைக்காக பங்களிக்கிறது. இதனால் உங்கள் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்களை பெறுவீர்கள்.


உணவுக் கோபுரத்தின் கீழ் பகுதியில் இருக்கும் உணவுகளை பெரிய அளவுகளில் உட்கொள்ளலாம். இதன் மாறாக மேல் பகுதியில் இருக்கும் உணவுகளை சிறிய அளவில் உட்கொள்ளுதல் வேண்டும். ஆனைத்து உணவுப்பொருட்களும் அனுமதிக்கப்படுகிண்றன.


முக்கிய குறிப்பு


சுவிஸில் உள்ள உணவு பொருட்களின் விபரம் மற்றும் அவை உற்பத்தியான இடம் போன்ற விபரங்கள் உணவுப்பொருள் வைத்திருக்கும் பார்சலில் பிரகடணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் சர்க்கரை அல்லது உப்பு போன்றவற்றின் அளவுக்குறிப்புகளை கவனிக்கக்கூடியதாக இருக்கும். இந்த குறிப்புகளை வாசிப்பதனால் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

Related links: