Living in Switzerland – Information and counselling online  

வீட்டில் உதவியும் சிகிச்சையும்

சுவிஸில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதை தவிர மருத்துவமனைக்கு வெளியே உதவியும் சிகிச்சையும் பெற்றுக்கொள்வதற்கான விரிவான வசதிகளும் உள்ளன. இந்த விடயத்தில் குடும்ப மருத்துவர் மருத்துவ சிகிச்சைகளுக்குப் பொறுப்பாகவும், வீட்டில் சிகிச்சைகள் வளங்கும் அமைப்பு மருத்துவ மேற்;பார்வைக்கு பொறுப்பாகவும் இருப்பர்.
ளுpவைநஒ- (ஸ்பித்தெக்ஸ்)- இவ்வாறுதான் சுவிஸில் வீட்டில் உதவியும் சிகிச்சையும் பெற்றுக்கொள்வதை அளைப்பார்கள்.


இந்த நிறுவனம் எப்பொளுது தலையிடுகிறது என்றால்:

  • ஒரு நோயாளி ஒரு அறுவைச்சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் பொழுது அல்லது அவரது நோயின் காரணமாய் வீட்டில் மருத்துவசிகிச்சை தேவைபடும் பொழுது.
  • முதியோர்களால் வீட்டை நிர்வாகிக்கும் தன்மையை இழந்து மருத்துவ வசதிகளுடன் இருக்கும் நிறுவனத்துக்கு செல்ல விரும்பாத போது அல்லது செல்ல முடியாத போது.
  • ஒரு நோயாளி அவரது நோயின் காரணமாய் வீட்டை நிர்வாகிக்கும் தன்மையை இழக்கும் பொழுது.
  • ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு உபகரணங்கள் வேண்டும்.
  • ஒரு இளம் தாயுக்கு பிரசவத்திற்கு பின் ஆதரவு தேவை.
  • ஒரு நோயாளிக்குழந்தையின் பெற்றோருக்கு ஆதரவு தேவை.


ஊழியர்கள்

  • மருத்துவமனையில் இருக்கும் பராமரிப்பைப்போன்று மருத்துவ சிகிச்சை வழங்குவார்கள்.
  • வீட்டை நிர்வாகிக்க உதவிசெய்வார்கள்.
  • உணவு சேவைக்கு ஏற்ப்பாடு செய்வார்கள்.


இங்கு வீட்டில் உதவியும் சிகிச்சையும் வழங்குவதற்கு பொதுப்பயன்பாட்டுடன் செயற்படும் அமைப்புகள் மற்றும் இலாபத்துக்காக செயற்படும் அமைப்புகளும் உள்ளன.
இலாபத்தை அடிப்படையாக கொள்ளாமல், வீட்டில் உதவியும் சிகிச்சையும் வழங்கும் ஸ்ப்பித்தெக்ஸ் நிறுவனங்களின் எண்ணிக்கை 650 ஆகும.; இது 27'000 பேரை கொண்டது.

Related links: