Living in Switzerland – Information and counselling online  

மன நலம்

நோய்களுள் மன நோய்கள் மிக அதிகமாக காணப்படுகின்றன. மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்கள் அவர்களது வாழ்வில் ஒரு முறையாவது மன நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பத்தில் ஒரு மனிதன் மன நல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளான்.


மன நோய்கள் நிஐமானவை. இவற்றுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வது அவசியமாகும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், சுவிஸ்நாடு இவ்வகையான இயற்கைப்பிரச்சனைகளால் வேதனைப்படும் மக்கள் இதனை எதிர்கொள்வதற்காக ஆதரவு மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கும் பல தொடர்பு வலையங்களை தன்வசம் வைத்துள்ளது.


உங்கள் கவனதிற்கு !
உளவியல் சிகிச்சை- மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் - மருத்துவமனை – பகல் மருத்துவமனை – மருந்துகள் போன்றவற்றின் கட்டணத்தை அடிப்படை சுகாதார காப்புறுதி வழங்கும். மருத்துவ உளவியல் சிகிச்சையில், கூடியது 10 அமர்வுகளுக்கான, அதாவது நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான கட்டணம் வழங்கப்படும்.


மேலதிகமாக 30 அமர்வுகள் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு, சிகிச்சை அளிக்கும் மருத்துவர் 6 அமர்வுகளுக்குப்பின் சுகாதாரக்காப்புறுதியில் பணியாற்றும் ஆலோசனை மருத்துவரிடம் தொடங்கிய சிகிச்சை பற்றிய அறிக்கை ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். அதுமட்டுமிண்றி உளவியல் சிகிச்சைக்கான கட்டணத்தை அடிப்படை சுகாதாரக்காப்புறுதி வழங்கவேண்டும் என்றால், இதன் சிகிச்சை ஒரு மருத்துவரால் நடத்திசெல்லுதல் அவசியமாகும்.


உளவியலாளர்கள் மூலம் எடுக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் அடிப்படை சுகாதாரக்காப்புறுதியினால் வழங்கப்படாது. மற்றபடி இவர் ஓர் மருத்துவரின் கீழ் பணிபுரிந்தால் மட்டுமே அதற்கான கட்டணம் வழங்கப்படும். சுகாதாரக்காப்புறுதி நிறுவனங்கள் துணைக்காப்புறுதி ஒன்றை உங்களுக்கு வழங்கக்கூடும். இந்த துணைக்காப்புறுதி அனைத்து செலவுகளுக்குமான கட்டணத்தை வழங்கும்.


பகல் மற்றும் இரவு நேரங்களில் நீங்கள் 143 என்னும் தொலைபேசி எண்ணுக்கு கை நீட்டும் நிறுவனத்துக்கு தொடர்புகொள்ளலாம் (டய ஆயin வுநனெரந).

In this section: themen/gesundheit/psyche/depression, themen/gesundheit/psyche/angehoerige, themen/gesundheit/psyche/kinder

Related links: