Living in Switzerland – Information and counselling online  

மருத்துவமனையில்

பொதுவாக மருத்துவமனையில் தங்குவதற்கு ஒரு குடும்ப மருத்துவராலோ அல்லது ஒரு சிறப்பு மருத்துவராலோ பரிந்துரைக்கப்பட்டால் மாத்திரமே அனுமதி உண்டு.


அடிப்படை மருத்துவக்காப்புறுதி மருத்துவமனையில்; பொதுவான பிரிவில் சிகிச்சை பெறுவதற்hன கட்டணத்தை அளிக்கிறது. சுpகிச்சை பெறும் மருத்துவமனை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் அமைந்திருக்க வேண்டும், மற்றும் மருத்துவக்காப்புருதியினால் அங்கிகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மருத்துவமனையில் இந்தபிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த பிரிவில் பொறுப்பில் இருப்பவர்களால் சிகிச்சை அளிக்கப்படும். தேவைப்பட்டால் அங்கு பணிபுரியும் விசேஷ மருத்துவர்களாலும் சிகிச்சை அளிக்கப்படும். பொதுவான பிரிவில் இருக்கும் நோயாளிகள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அற்றவர்கள் ஆகிறார்கள்.
மருத்துவக்காப்புறுதி உங்களுக்கு துணைக்காப்புறுதி ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கலாம். இந்தக்காப்புறுதி அரை தனியார் பிரிவு அல்லது தனியார் பிரிவில் ஏர்ப்படும் சிகிச்சைகளுக்கான கட்டணத்தை வளங்கும். தனியார பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு தனி அறையில் இருப்பதற்கு உரிமையும், அரை தனியார் பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு இரண்டு கட்டில் இருக்கும் அறையில் இருப்பதற்கு உரிமையும் உள்ளன. இவ் இரண்டு பிரிவுகளிலும் இருப்பவர்களுக்கு அவர்கள் சுவிஸ் ரீதியில் விரும்பும் மருத்துவமனை மற்றும் அவர்கள் விரும்பும் மருத்துவரையும் தேயர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது.
மருத்துவமனைகளில் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான  பிரதிவாதிகளாக இருக்கிண்றார்கள். மருத்துவத்தாதிகள் (நர்ஸ்மார்) மருத்துவர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வார்கள், ஆதையால் இது சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கு உறுதி அளிக்கின்றது.
சுவிஸில் உள்ள மருத்துவமனைகளில் அனேகமான ஊழியர்கள் வெளிநாட்டவர்கள். இது பல்வேறு உள்கலாச்சாரங்களுடனும் சமூகத்துடனும் தொடர்பு இணைப்பதற்கு வசதியாக அமைகிறது.





In this section: themen/gesundheit/spital/besuch, themen/gesundheit/spital/sozialdienst, themen/gesundheit/spital/essen, themen/gesundheit/spital/behandlung

Related links: