Living in Switzerland – Information and counselling online  

ஒன்றைச் சார்ந்துள்ளமை

ஒன்றை சார்ந்துள்ளமை, இதில் சிலவற்றைப் பார்த்தால், அவை புகையிலை, மது பானம், வன்மையான அல்லது மென்மையான கஞ்சா, மருந்து போன்ற பொருட்களுக்கு அடிமையாக இருப்பதாகும். ஆனால் இவற்றுக்கு மாறாக பொருட்களுக்கு அடிமைப்படாமல் வேறுவிதமான அடிமைப்பட்டிருத்தலையும் காணலாம். இப்படியாக மேலும் மேலுமான மக்கள் பொருட்கள் வாங்கவேண்டும் என்ற கட்டாயத்துக்கு அடிமையாகவும் மற்றும்  விளையாட்டுகள், இன்ரர்னத் போன்றவற்றுக்கு அடிமையாகவும் உள்ளனர்.


இவ்வகை சார்புகளுக்கு பொதுவாக இருப்பவை:

  • இவ்வாறு இருப்பவர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல், இழந்த நிலையில் இருப்பார்கள்.
  • இந்த பழக்கத்தை தொடர்ந்து கைப்பிடிப்பதால், இதன் விளைவாக இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் அதிகமான அளவில்; இந்த பழக்கத்தை கையாள விரும்புவார்கள்.
  • இவர்கள் இல்லாமை, போதாமை போன்ற அறிகுறிகள் காட்டுவார்கள்.
  • இவர்களது நடத்தை, பாவனை போன்றவற்றின் விழைவாக சமுகத்திலும் உளவியலிலும் கடுமையான பாதிப்பு எற்ப்பட்டிருப்பினும், இவ்வாறு அடிமைப்பட்டிருப்பவர்கள் எதையும் மாற்றிக்கொள்வதில்லை (அல்லது எதையும் மாற்ற முடியாத நிலையில் இருப்பர்).

சுவிஸில் இவ்வாறு அடிமைப்பட்டிருப்பவர்களுக்குப் பல விதமான உதவிகளும் மற்றும் இவர்களது உறவினருக்கு ஆதரவும் உள்ளன.
ஒன்றை சார்ந்துள்ளமை மற்றும் போதைக்கு அடிமைத்தனம் போன்றவற்றிற்கு தடுப்பு செயல்திட்டங்களில் ஈடுபடுவதற்கு முழு சமுகத்தின் ஒத்துளைப்பும் தேவைப்படுகின்றது. பாடசாலைகள், இளைஞர் அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் பின்னராக முதலாளிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

In this section: themen/gesundheit/sucht/drogen, themen/gesundheit/sucht/alkohol, themen/gesundheit/sucht/rauchen

Related links: