ஒன்றிணைவாக்கம்
சுவிசினுள் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அடிப்படைகளும் விதிமுறைகளும் வெளிநாட்டவர் சட்டத்தில் (AUG) ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து வந்தவர்களின் ஒன்றிணைவாக்கத்தின் தரத்திற்கேற்ப அவர்களின் குடும்பத்தை இங்கழைத்தல், வதிவிட அனுமதியை நீடீத்தல், வதிவிட அனுமதியைத் தரமுயர்த்தல் என்பன தீர்மானிக்கப்படும்.
அதே வேளையில் புலம்பெயர்ந்து இங்கு வந்தோரும் தமது ஒன்றிணைவாக்கத்திற்கு கீழ்வரும் விடயங்களில் ஆர்வத்துடன் செயற்படுவதை அரசு எதிர்பார்க்கிறது:
- அரசின் சட்டத்தை விளங்கி அதன் பெறுமதியை மதித்துக் கடைப்பிடித்தல்.
- வசிக்கும் இடத்தின் மொழியைக்கற்றல்.
- வேலைசெய்வதற்குத் தயாராக இருத்தல்.
- கல்வி தகமை மேற்படிப்பபிற்குத் விருப்பமாக இருத்தல்.
கவனிக்க
வதிவிட அல்லது குறுகிய கால வதிவிட அனுமதியைத் (பி அல்லது எல்) தரும்போது மொழி அல்லது ஒன்றிணைவாக்கத்திற்கான கல்வியைக் கற்கும்படி நிபந்தனை தரப்படலாம். குடும்பத்தை இங்கழைத்தலுக்கும் இவ்வாறான நிபந்தனைகள் தரப்படலாம். இவை ஒன்றிணைவாக்கத்திற்கான ஒப்பந்தமாக அமைக்கப்படலாம். பல மாநிலங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. ஒன்றிணைவாக்கத்தின் தரம் நிரந்தர அனுமதி சி பெற உதவும்.
ஒன்றிணைவாக்கத்திற்கான தகமைநிலைகள் (சில அரசு சார்பற்றவை)
இவை மாநில அமைவிலும் பெரிய நகரங்களிலும் செயற்படும் மத்திய தொடர்பு நிலைகள். இவை புலம்பெயர்ந்து வந்தோருக்கு, மக்கள் சபைகளுக்கு, கடமை அளவில் அல்லது சொந்த விருப்பில் ஒன்றிணைவாக்கத்திற்கான செயலில் ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு தகமைத் தொடர்பு நிலைகளாகச் செயற்படுகின்றன.
In this section: புலம்பெயர்வுக்கடமையாளருக்கு மேற்கல்வி, மாநிலங்களும் மக்கள்சபைகளும், இணைவாக்கல் ஒப்பந்தம், இணைவாக்கல் தரமும் சட்டமுடிவுகளும், குடிபுகுந்தவருக்குத் தகவல்நிலைகள்